நுவரெலியா மாவட்டத்தின் இராகலை பிரதேசத்தில் தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ட்ரெக்டர் வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளளனர்.
இராகலை, ஸ்டாபோட் பிரிவிலுள்ள 42 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு 7 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள டிக்சன்கோனார் தோட்டப் பகுதிக்கு ட்ரக்டர் சென்று கொண்டுகொண்டிருந்த போது அது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இஞ்சினுடன் பெட்டியை இணைக்கும் பகுதி உடைந்ததனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ள போதும், சிறியதொரு பெட்டியில் பொறுப்பற்ற விதத்தில் 42 தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்கு தோட்ட நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்று பிரதேச மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
இவ்விபத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமானதொரு சூழ்நிலை நிலவியது.