கண்டி – பல்லேகலே பகுதியில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி சாலை ஒன்றை நிறுவுவதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
சினோவெக் என்னும் தடுப்பூசிகளே இவ்வாறு உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.
சீனாவின் சினோவெக் பயோடெக் நிறுவனம், கெலுன்லைப் சயன்ஸ் நிறுவனம் மற்றும் அரச மருந்து உற்பத்தி நிறுவனம் ஆகியன இணைந்து இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை பெற்று கொள்வதில் உலக அளவில் பெரும் போட்டி நிலவி வருவதாகவும், இந்த பிரச்சினைக்கு தீர்வாக இலங்கையிலேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.