இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் 28 ஆம் திகதி வரையில் இரண்டு கட்டங்களாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையிலும் அதனை தொடர்ந்து 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை வரையிலும் முழு நேர பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கும், வைத்தியசாலைகளுக்கு அவசர நோயாளிகளை கொண்டு செல்வோரையும் தவிர வேறு எவருக்கும் வீடுகளை விட்டு வெளியேற முடியாது என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தக் காலப்பகுதியில் பொதுப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.