கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் தீ ஏற்பட்டுள்ளது.
அந்த இடத்திற்கு விரைந்துள்ள கடற்படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
‘எம்வி – எக்ஸ்பிரஸ் பெரல்’ என்ற குறித்த கப்பல் இந்தியாவின் குஜராத்தில் இருந்து இரசாயனப் பொருட்களுடன் கொழும்புத் துறைமுகம் நோக்கி வந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் கப்பலின் முன்பாகத்தில் புகை வந்த நிலையில், இன்று காலை அதில் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கடற்படை கப்பல்கள் அங்கு தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.