January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிக்க பாராளுமன்ற பேரவை இணக்கம்!

பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க பாராளுமன்ற  பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இவரின் பெயர் பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதியின் யோசனைக்கு பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் இலங்கை, சோசலிஷ குடியரசாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையின் சட்டமா அதிபராக பதவி ஏற்கவுள்ள 3 ஆவது தமிழரும், 4 வது சிறுபான்மையினருமாவார்.

சஞ்சய் ராஜரட்ணம்  2019 ஒக்டோபரில் பதில் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, மே 10, 2019 அன்று பதவியேற்ற சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவின் பதவிக்காலம் இந்த மாதம்  நிறைவடைந்துள்ள நிலையில், அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.