ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட உள்ளதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜூன் நடுப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையே புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்த நிலையில் அதற்கு தேசிய பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்தது.
எனினும் தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வதில், ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட நீண்ட இழுபறி நிலையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.