இலங்கை தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்க விரும்பும் எந்த ஒரு தனிநபரும் அல்லது அமைப்புகளும் ஜூன் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறிவிக்கும் படி பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமை குறித்த சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்காக சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் 15 பேர் கொண்ட பாராளுமன்ற விசேட குழுவை சபாநாயகர் மே 5 ஆம் திகதி நியமித்தார்.
இந்த விசேட தெரிவுக்குழு தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்த பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதற்கமைய பொதுமக்கள் தமது பரிந்துரைகளை Sec.pscelectionreforms2021@par Parliament.lk. என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது கீழ் உள்ள முகவரிக்கு எழுத்து மூலமாகவோ குறித்த திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கும்படி பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர கேட்டுக்கொண்டுள்ளார்.
அனுப்ப வேண்டிய முகவரி,
செயலாளர்,
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு,
இலங்கை பாராளுமன்றம்,
ஶ்ரீ ஜயவர்தனபுர ,
கோட்டே