January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தொடர்பில் சுகாதாரத்துறையினர் கருத்து தெரிவிப்பதை அரசாங்கம் தடை செய்துள்ளது’: சஜித் பிரேமதாஸ

கொரோனா தொற்று தொடர்பில் சுகாதாரத்துறையினர் கருத்துத் தெரிவிப்பதை சுகாதார அமைச்சு தடை செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘சுகாதார அமைச்சரின் தடைக்கு அரச மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறையினரின் பதில் என்ன? இந்தத் தடைக்கு கட்டுப்படப் போகின்றீர்களா? என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முகங்கொடுத்துள்ள பயங்கரமான நிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டை தொற்று நோயில் இருந்து மீட்டெடுக்கும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டிய தருணத்தில், அதுதொடர்பில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.