இன்று (வியாழக்கிழமை) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து அம்புலன்ஸ் வண்டிகளுக்கும் கட்டணம் அறவிடுவதை இடைநிறுத்துவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்று (20) பிற்பகல் முதல் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு கட்டணங்கள் அறவிட வேண்டாம் என அதிவேக நெடுஞ்சாலைகள் அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர் பேமசிறி அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய மறு அறிவித்தல் வரை அம்புலன்ஸ் வண்டிகள் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்க முடியும்.
இதனைத்தவிர கட்டணம் செலுத்தாமல் ஜனாதிபதியும் பிரதமரும் மட்டுமே அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியும் என்றும் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.