கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘தேசத் துரோக, துறைமுக நகர சட்டமூலத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்’ என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.