January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் அறிகுறிகள் காணப்படுமாயின் உடனே வைத்தியரை அணுகுமாறு அறிவுறுத்தல்!

Shavendra-Silva-

கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள 55 வயதுக்கு மேற்பட்டோர் உடனே வைத்தியரை அணுகுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 55 வயதுக்குட்பட்ட குறித்த நபர்களுக்கு, கொரோனா தொற்று என சந்தேகப்படக் கூடிய அறிகுறிகள் காணப்படுகின்ற சந்தர்ப்பங்களிலும் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரை அல்லது மருத்துவமனையை நாடுமாறும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று பரவல் அச்ச நிலைமையை கருத்திற் கொண்டு இந்த அறிவுறுத்தலை இராணுவத் தளபதி விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினம் (புதன்கிழமை) 36 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1051 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய கொவிட் மரணங்கள் இதுவாகும். மேலும், நேற்றைய தினம் மாத்திரம் 3,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 151,311 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.