July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று உறுதி

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் கடந்த நாட்களில் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பாக சுகாதாரப் பிரிவினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இதேவேளை ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான மருதபாண்டி ராமேஷ்வரனுக்கு நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.