தேசிய படைவீரர்கள் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் உள்ள படைவீரர்கள் நினைவுத் தூபி வளாகத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
மூன்று தசாப்த காலமாக இருந்துவந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து 12 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இதனையொட்டி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தோரை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.