இலங்கையில் இன்று (புதன்கிழமை) முதல் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் தினசரி எண்ணிக்கை 3000 ஐக் கடந்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில்,நாட்டில் 3,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 150,771 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 27,389 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு இன்று (19) கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 1,222 பேர் குணமடைந்துள்ளதையடுத்து நாட்டில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,367 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 5 ஆவது கர்ப்பிணி பெண் இவர் ஆவார்.
அத்துடன் நேற்று கொரோனா காரணமாக 34 மரணங்கள் பதிவானதையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.