கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் இன்றும், நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டைக் காட்டிக்கொடுக்கும் சட்டமூலத்தை நிறைவேற்ற இடளிக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.