
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளருமான மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தனக்கு கொவிட் தொற்று அறிகுறிகள் தென்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர் அது தொடர்பான பரிசோதனையை செய்துகொண்டுள்ளார்.
இதன்போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவரை தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவருடன் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்பபடுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.