கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணிய தவறிய மற்றும் சமூக இடைவெளியை பேண தவறியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறைமையை மீறி, வீடுகளிலிருந்து வெளியே வந்த 99 பேரும் இந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதனிடையே, மாகாணங்களுக்கிடையே நுழைய முற்பட்ட 113 வாகனங்கள் தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 10,413 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.