
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர நோய் நிலைமை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அசாத் சாலி திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டார செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.