வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு பொருத்தமான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான தொழில் அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வெளிநாட்டு தொழிலாளருக்கான காப்பீட்டுத் திட்டத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்க உள்ளது.
இதற்கமைய வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்லும் இலங்கையர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் 600,000 ரூபா காப்பீட்டுத் தொகையும் ஊனமுற்றால் அதிகபட்சமாக 400,000 ரூபா காப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
எனினும், வெளிநாட்டில் பணிபுரியும் போது ஏற்படும் விபத்துக்கள், முதலாளிகளால் துன்புறுத்தபடல், மற்றும் துன்புறுத்தலினால் ஏற்படும் மன மற்றும் சுகாதார பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு இது பொருந்தாது என்று தொழில் அமைச்சு கூறுகிறது.
இந்த காப்பீட்டுத் திட்டம் தொடர்பான முழு விபரம் அடங்கிய அறிக்கையை தொழில் அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.