May 25, 2025 20:32:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்

அண்மையில் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய அனைத்து கொள்கலன்களும் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன   பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்தோடு புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய, இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் எதுவும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என சுங்கப் பணிப்பாளரினால் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

புற்றுநோயை உருவாக்கும் ‘எப்போலடெக்ஸின்’ திரவம் கலக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய 100க்கும் அதிகமான கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியதை அடுத்து இது தொடர்பில் நாட்டில் சர்ச்சை ஏற்பட்டது.

எனினும் இந்த தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் மீண்டும் கொண்டுவரப்பட்ட நாடுகளுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, பாம் எண்ணெய் வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதையும் முள்ளுத் தேங்காய் செய்கைக்கும் அரசு முழுமையாக தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.