January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஊரு ஜூவா, கொஸ்கொட தாரக’ கொலை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த ‘ஊரு ஜூவா, கொஸ்கொட தாரக’ ஆகியோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது.

கொஸ்கொட தாரக, ஊரு ஜூவா ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தமை தொடர்பான விசாரணையின் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபர்கள் கொலை செய்யப்பட்டமை நாட்டின் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சந்தேகநபர்களின் மரணம் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்கே, இவ்வாறு பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.