
வெலிக்கடை சிறைச்சாலை கட்டிட தொகுதியை ஹொரண, மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, தற்போது வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள நிலப்பரப்பை கலப்பு நகர அபிவிருத்தி திட்டமொன்றுக்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள நிலப்பரப்பை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையானது 42 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப் பெற்றுள்ளதுடன், ஹொரண, மில்லேவயிலுள்ள நிலப்பரப்பு 200 ஏக்கர்களைக் கொண்டதாக உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.