
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நினைவுகூர்வதற்கான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து, அதுதொடர்பாக வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த வீடியோ மீதான விசாரணைகளில் சந்தேகநபர்கள் மட்டக்களப்பு கிரான் கடற்கரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேநேரம், மட்டக்களப்பு கல்குடா பகுதியில் விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.