
அரச ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதற்கமைய மே மாதம் 25 ஆம் திகதி சம்பளம் பெறும் அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் (வெள்ளிக்கிழமை) மே 21 ஆம் திகதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே நாட்டில் மே 24 மற்றும் 25 ஆம் திகதிகள் விசேட அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.