May 29, 2025 20:44:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்ட மூலத்தை இலகுவாக நிறைவேற்ற முடியும்’; அரசாங்கம் நம்பிக்கை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு எந்த ஒரு ஆட்சேபனைகளும் இல்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அதன்படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பாக உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ள அனைத்து தீர்மானங்கள் மற்றும் திருத்தங்களை செயற்படுத்த அரசாங்கம் இணங்குவதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் இலகுவாக நிறைவேற்ற முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.