தாய்ப்பால் ஊட்டும் அனைத்து தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள தகுதி உடையவர்கள் என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை பெற்று கொள்வதற்கு எதிராக விசேட காரணிகள் எதுவும் இல்லாத தாய்ப்பால் ஊட்டும் அனைத்து தாய்மார்களும் மற்றவர்களை போன்று கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
எனினும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித ஆய்வுகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் அவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது குறித்து வைத்தியர்களினால் முழுமையான பரிந்துரைகள் வழங்கப்படவில்லை என்றார்.
இந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு தாய்ப்பால் ஊட்டும் அனைத்து தாய்மார்களும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதால் அவர்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.