இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர்.
கறுப்பு உடைகளை அணிந்து அவர்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை இவர்கள் சபை நடவடிக்கைகளிலும் கறுப்பு உடையிலேயே கலந்துகொண்டனர்.
எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் இரா.சாணக்கியன், தவராசா கலையரசன் மற்றும் கோவிந்தம் கருணாகரன் ஆகியோர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்