January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுத்த வெற்றியின் 12 ஆவது ஆண்டு நிறைவு: 452 இராணுவ அதிகாரிகள் மற்றும் 4,289 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு!

File Photo: Army.lk

இலங்கை இராணுவத்தின் (வழக்கமான மற்றும் தன்னார்வப் படை) 452 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பரிந்துரைக்கு அமைய பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் முன்மொழிவுக்கு அமைய 4,289 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிறிகேடியர் பதவியிலிருந்து 12 பேர் மேஜர் ஜெனரல் பதவிக்கும், கர்னல் பதிவியிலிருந்து 37 பேர் பிறிகேடியர் பதவிக்கும், லுதினன் கர்னல் பதிவியிலிருந்து 39 பேர் கர்னல் பதவிக்கும், மேஜர் பதவியிலிருந்து 40 பேர் லுதினன் கர்னல் பதவிக்கும், கபிதான் பதிவியிலிருந்து 62 பேர் மேஜர் பதவிக்கும், லுதினன் பதவியிலிருந்து 61 பேர் கபிதான் பதவிக்கும், இரண்டாவது லுதினன் பதவியிலிருந்து 201 பேர் லுதினன் பதவிக்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் அவர்கள் தங்களது பதவியில் இருந்து அடுத்த கட்டத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 2021 மே 18 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இவர்கள் தரமுயர்த்தப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.