January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று: இலங்கையின் எட்டு மாவட்டங்கள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

நாட்டில் தற்போதைய நிலையில் எட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

நாளாந்தம் 100 க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல், காலி, நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 80க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே, குறித்த மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவக்கூடிய அதிக ஆபத்தான நிலை காணப்படுகின்றது.

அத்தோடு,எதிர்வரும் வார நாட்களில் கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதனைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மிகவும் பாதுகாப்பான முறையில் செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று தொடர்பாக நாட்டின் அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.

மேலும், நாட்டில் தற்போது கொரோனா தொற்றானது ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு எதிர்வரும் வார நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல, சுகாதார ஊழியர்களின் குடும்பங்களிடையே தொற்று நோய் பரவி வருவதாக தெரிவித்த அவர், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.