July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘போர்ட் சிட்டி’ சட்டமூலத்தை நிறைவேற்ற விசேட பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: உயர் நீதிமன்றம்

போர்ட் சிட்டி சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

போர்ட் சிட்டி சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என்று 19 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான தீர்ப்பை உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு சமர்ப்பித்திருந்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இன்று சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில பிரிவுகள் இலங்கை அரசியலமைப்புடன் முரண்படுவதாகவும் உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

அரசியலமைப்புடன் முரண்படும் பகுதிகளை சீர்திருத்த முடியுமான விதம் தொடர்பாகவும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்ட் சிட்டி சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு 62 பக்கங்களைக் கொண்டதாகும்.

உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உட்பட உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியன்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரை நீதியரசர்கள் குழாம் மூலம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.