January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் விக்னேஸ்வரன், நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைவு கூர்ந்து வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று விசேட வழிபாட்டு நிகழ்வொன்று நடத்தப்பட்டது.

சுகாதார வழிகாட்டல்களை பின்பன்றி இந்த வழிபாட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் சமூக ஆர்வலர்கள், உறவுகளை இழந்தவர்கள் என சிலர் கலந்துகொண்டனர்.