
இலங்கையின் அரச இணையதளங்கள் மீது இன்று அதிகாலை சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு, ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கைக்கான சீன தூதரகம் ஆகியவற்றின் உத்தியோகப்பூர்வ இணையதளங்கள் மீதே சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உட்பட்ட இணையதளங்கள் சீர்செய்யப்பட்டதாக இலங்கை விமானப்படையின் பேச்சாளர் துஷான் விஜேதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படையின் இணைய பாதுகாப்பு பிரிவு, இந்த சைபர் தாக்குதல் தொடர்பாக ஸ்ரீலங்கா கணினி அவசர தயார்நிலை அணிக்கு அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பாக தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த தினத்தில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.