இலங்கையில் மே 24 மற்றும் 25 ஆம் திகதிகள் விசேட அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
26 மற்றும் 27 ஆம் திகதிகள் வெசாக் விடுமுறை என்பதனால் அதற்கு முதல் நாட்களான 24, 25 ஆம் திகதிகளையும் விடுமுறை தினங்களாக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த விடுமுறை வங்கி, வர்த்தக நிறுவனங்களுக்கும் பொருந்தாது என்று பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இரண்டு கட்டங்களாக நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில், இந்த வார இறுதியுடன் இணைந்தாக அடுத்த வாரத்தை முழுமையாக விடுமுறை நாட்களாக மாற்றியமைக்கும் வகையில் இவ்வாறாக 24, 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளன.