
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை யாழ். பல்கலைக்கழத்தினுள் மாணவர்கள் ஏற்பாடு செய்வார்கள் என தகவல்கள் கிடைத்திருக்கின்றன எனக் கூறி, பல்கலைக்கழகத்தை சுற்றி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் எழுந்துள்ள கொரோனா தொற்று நிலைமைகளை அடுத்து, நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, யாழ். பல்கலைக்கழகத்திலும் அத்தியாவசியப் பரீட்சை செயற்பாடுகள், ஆய்வு நடவடிக்கைகள் தவிர மாணவர்கள் உள்நுழைவு தடுக்கப்பட்டிருந்தது. ஆயினும், நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
எனினும், பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் சிலர் நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு தயாராகியுள்ளனர் என்று தகவல் கிடைத்திருப்பதால், பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும், பல்கலைக்கழகத்தை சுற்றி இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.