‘கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டம்’ மிகப் பெரிய பேரழிவு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றின் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துறைமுக நகரம் உலகின் புகழ்பெற்ற மையமாக மாற்றப்பட வேண்டும்.இதற்கிடையில், நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் “ஸ்மார்ட்” வெளியுறவுக் கொள்கையை இலங்கை கொண்டிருக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.