October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

190 மில்லியன் ரூபாவுக்கு 10 அம்புலன்ஸ் வண்டிகள் கொள்வனவு ;அரசின் திட்டம் குறித்து விளக்கம் கோரும் எதிர்க்கட்சி

அரசாங்கம் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ. 190 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்கு 10 அம்புலன்ஸ் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளமை குறித்து விக்கவேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

10 அம்புலன்ஸ் வண்டிகளை இறக்குமதி செய்ய இவ்வாறான ஒரு பெருந்தொகையை செலவிடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சமீபத்தில் கொவிட் -19 செயல்திறன் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செலவுகள் குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு 10 அம்புலன்ஸ் வண்டிகளை வாங்குவதற்காக அந்த நிதியில் இருந்து ரூ. 190 மில்லியனுக்கும் அதிகமான தொகை  செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அரசாங்கம் உடனடியாக நாட்டிற்கு விளக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

‘அம்புலன்ஸ் வண்டிகளுக்கு அரசாங்கம் சுமார் 1900 லட்சம் ரூபாய் செலவிடுகிறது, “இவை என்ன வகையான அம்புலன்ஸ் வண்டிகள் என்றும் அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் கொள்வனவு செய்யப்பட உள்ள அம்புலன்ஸ் வண்டிகள் குறித்த முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.