மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மற்றுமொரு கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் தோன்றியுள்ளதாக கொழும்பு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் தினேஸ் கொக்கலகே தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வருபவர்களில் சிலர் சுகாதார வழிகாட்டுதல்களை பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதால் இந்த அபாயம் தோன்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே நாட்டில் இதுவரை முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1,315,250 ஆகும்.இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6% மட்டுமே ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் “ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா” தடுப்பூசியின் முதலாவது டோஸ் 925,242 பேருக்கும், இரண்டாவது டோஸ் 267,077 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
“சினோபார்ம்” தடுப்பூசியின் முதல் டோஸ் 375,316 பேருக்கும், இரண்டாவது டோஸ் 2,435 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு “ஸ்பூட்னிக் வி” தடுப்பூசியின் முதல் டோஸ் 14,699 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.