
இஸ்ரேல்- பலஸ்தீன் இருதரப்பும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல்- பலஸ்தீன் நாடுகளுக்கு இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளுடைய மக்களும் பரஸ்பரம் சமாதானம், பாதுகாப்பு மற்றும் அங்கீகாரத்துடன் வாழும் நிலை உருவாக வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் ஸ்தாபக தலைவர் என்ற வகையில் இஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாக மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
பலஸ்தீனின் நீண்ட கால ஆதரவாளரான தான் பலஸ்தீன மக்களின் நியாயமான தேச உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.