
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இன்று ((திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேல் மாகாண கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகளை பெற்று கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று ஏனைய மாகாணங்களிலும் உள்ள ஆசிரியர்களும் தடுப்பூசிகளை போடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, நாட்டில் கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டுமாயின் பாடசாலைகளுக்கு தேவையான சுகாதார கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.