இலங்கையில் இதுவரை வைத்தியசாலைக்கு செல்லாமல் வீடுகளில் இருக்கும் கொரோனா நோயாளர்களுக்கு உதவுவதற்கு புதிய தொலைபேசி இலக்கங்களை சுகாதார சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ளது.
இந்த விசேட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி வீடுகளில் உள்ள கொரோனா நோயாளர்கள் தொடர்பில் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை பெற்று கொள்ள முடியும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
011 79 66 366 என்ற இலக்கத்துக்கும் 1906 அல்லது 1999 என்ற துரித எண்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெறமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அறிகுறியற்ற கொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்குவது தொடர்பில் சுகாதார தரப்பினர் ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.