இலங்கையில் கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களுள் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7,317 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.