January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வெலே சுதாவை’ பூஸ்ஸ சிறையில் இருந்து இடமாற்ற வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

மரண தண்டனைக் கைதி ‘வெலே சுதாவை’ தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து வேறு எந்தவொரு இடத்துக்கும் இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலே சுதாவின் தாயார் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை ஆராய்ந்த பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தனது மகனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெலே சுதாவின் தயார் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இம்மாதம் 24 ஆம் திகதி வரை வெலே சுதா வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் விதமான மேன்முறையீட்டு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.