
இலங்கையின் லக்சல மற்றும் சலுசல ஆகிய நிறுவனங்களின் தலைவரான பிரதீப் குணவர்தன,கொரோனா தொற்றால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் முறை பொறியியலாளரான இவர், அரச வர்த்தக கூட்டுத்தாபனம் மற்றும் தர நிர்ணய சபை ஆகியவற்றின் தலைவராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.