November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஆளும்- எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’; ஆதிவாசிகள் தலைவர்

கொரோனா தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆதிவாசிகள் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் மொனராகலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒரு கடமை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கட்சிகள், நிறம், இனங்கள், மதங்கள் மற்றும் அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டிற்காக உழைப்பது இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது.

இருப்பினும்,  எதிர்க்கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த ஒரு சில நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார, கொவிட்டுக்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் இறந்தாலும் அவரிடம் பணம் இல்லை. எனவே அதற்கான பணத்தை செல்வந்தர்கள் வழங்குவதற்கு முன்வருமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், கொரோனாவுக்கான தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை என்றால் வீட்டில் இருக்குமாறு என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். எனவே, நான் தற்போது வீட்டில் இருக்கிறேன். வீட்டிலேயே மருந்துகளைப் பெறுவதற்கான முறை என்ன? உணவுப் பொருட்களை பெறும் முறை என்ன? என கேள்வி எழுப்பியிருந்தார்.