January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Train Common Image

ரயில்வே ஊழியர்கள் நாளை (திங்கட்கிழமை) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பயணிகள் மாற்று போக்குவரத்து முறைகளை பயன்படுத்துமாறு ரயில் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ரயில் இயந்திர இயக்குனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் தொழில் சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க கூடுதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.