July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: சட்டமா அதிபரின் கருத்து தொடர்பில் சி.ஐ.டி.யினரின் அறிக்கையை கோரினார் சரத் வீரசேகர!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கைகள் முழுமையற்றவை என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களில், 42 பேர் மீதான சாட்சியங்களை எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்துமாறும், ஐந்து சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் முழுமையற்றவை எனவும் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.

இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரவினால் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, தனது பதவிக்காலம் நிறைவடைய முன்னர், குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது என சட்டமா அதிபர்  குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, தான் குற்றப் புலனாய்வு  திணைக்களத்திடம் அறிக்கை கோரியதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.