January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இஸ்ரேல் – காசா எல்லையில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையை கருத்திற்கொண்டு அங்கு வசிக்கும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு  இஸ்ரேலின் டெல்அவிவ் நகரிலுள்ள இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இஸ்ரேலில் தோன்றியுள்ள அமைதியற்ற சூழ்நிலையில், மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென்றும் இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், இலங்கையர்கள் தங்களது பயண ஆவணங்களை எப்போதும் சுலபமாக எடுக்கக்கூடிய இடத்தில் வைத்து  கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.

மிகவும் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளின் போது அழைப்பினை மேற்கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றையும் தூதரகம் அறிமுகம் செய்துள்ளது.

058 6875764 மற்றும் 055 9284399 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான கலவரங்கள் மற்றும் மோதல்களால் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் இலங்கையை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருவதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.