Photo: Facebook/ Dr. Sudarshini Fernandopulle
இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரண வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக செல்வந்தர்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இராஜங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் நோயாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றால் போன்று சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களுக்கு மருத்துவமனைகளில் பற்றாக்குறை நிலவுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையில் மருத்துவமனைகளில் தற்போது அவசரசிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அங்கு சிகிச்சையளிப்பதற்கான சுவாச உதவிக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும், இதற்காக நாட்டிலுள்ள செல்வந்தர்கள் உதவ வேண்டுமெனவும் இராஜாங்க அமைமச்சர் குறிப்பிட்டுள்ளார்.