February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.புதிய செம்மணி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியத்துடன்,மோட்டார் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி, வீட்டில் இருந்த பொருட்கள் என்பவற்றையும் அடித்து உடைத்து அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் , வீட்டிலிருந்த இளைஞன் ஒருவரின் தங்க சங்கிலி ஒன்றையும் தாக்குதலாளிகள் அறுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்கிய குழு மோட்டார் சைக்கிள்களில் வந்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.

இதேவேளை குறித்த கும்பல் மது போதையில் அப்பிரதேசத்தில் நீண்ட நேரமாக நின்று அட்டகாசம் புரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

This slideshow requires JavaScript.