October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இந்த ஆண்டில் 717 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் இன்று (சனிக்கிழமை) 2,371 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 140,456 ஆக உயர்ந்துள்ளது.

அத்தோடு 23,516 கொரோனா தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள பல கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு இன்று கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,352 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 117,220 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் இதுவரை 921 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.அவற்றில் 717 அல்லது 77.85 சதவீதம் மரணங்கள் இந்த ஆண்டின் முதல் நான்கரை மாதங்களில் பதிவாகியதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 1 முதல், நாட்டில் 400 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில்,  ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 317 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது கொரோனா அலையின் போது, ​​இலங்கையில் கொரோனா இறப்பு விகிதம் மாதத்திற்கு 2.76 சதவீதமாகவும், இரண்டாவது கொரோனா  அலையின் போது இது மாதத்திற்கு 10.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளமை கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 5 நாட்களில் மட்டும் இலங்கையில்  120 இறப்புகள் பதிவாகியுள்ளன.